ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் தங்களின் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள்.
ஆனால் மிகவும் குறைந்த நபர்களுக்கு மட்டுமே வேலைகிடைக்கிறது. லட்சக்கணக்கான இன்ஜியர்கள் என்ன ஆனார்கள் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
ஒரு காலத்தில் பொறியியல் படிப்பு என்பது சமானியனுக்கு எட்டாத கனியாக இருந்தது. ஆனால் இன்றோ உங்கள் பகுதியில் எத்தனை இன்ஜினியர் இருக்காங்க என்பது மாறி , வீட்டில் எத்தனை என்ஜினியர் இருக்காங்க என்று கேட்கிற அளவுக்கு வந்துள்ளது. இது வளர்ச்சியாக பார்க்கப்பட்டாலும், வேலையில்லா திண்டாட்டத்திற்கு இதுவும் ஒரு காரணமா என கேள்வி எழுந்துள்ளது. வருடத்திற்கு இந்தியாவில் மட்டும் 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் தங்களது படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள்.
ஆனால் அவர்களில் கால்பங்கு நபர்களுக்கு மட்டுமே வேலை கிடைப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் வேலைவாய்ப்பு தட்டுப்பாடு என்று பார்த்தால் அதற்கும் மேலாக ஒரு சிக்கல் இருந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை அமைப்பான நாஸ்காம் வெளியிட்ட தகவலில், 2022ம் ஆண்டு வரை சைபர் செக்கூரியடி என்ற துறைக்காக உலகம் முழுவதும் 60 லட்சம் இஞ்சினியர்கள் தேவை என்று கூறுகிறது.
ஒரு வேளை இந்த வேலைகள் இந்தியாவில் இல்லையா என்று கேட்டால் அதற்கும் நாஸ்காம் ஒரு பதிலை வைத்திருக்கிறது. இந்த 60 லட்சம் வேலைகள் 46 நாடுகளில் இருந்து செய்யலாம் என்றும் தெரிவிக்கிறது. பின் ஏன் இந்தியாவில் இன்ஜினியர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பாடுகிறது என்பதை பார்க்கவேண்டும்.
இத்தனை இன்ஜினியர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தாலும் அவர்களில் 94சதவீத பேர் தான் வேலைக்கு தகுதியாக இருப்பதாகவும் கூறுகிறது மற்றொரு புள்ளி விவரம். இதனால் தாங்கள் மீதம் இருக்கும் வேறும் 6 சதவீத நபர்களை தான் வேலைக்கு எடுப்பதாக கூறுகின்றன ஐடி நிறுவனங்கள். இது ஐடி துறைக்கும் மட்டும் தான் பொருந்துமா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும். எல்லா துறையிலும் இதே நிலைதான் இருக்கிறது.
மாணவர்கள் சிறந்த இன்ஜினியர்களாக உருவாகாததற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் படிக்கும் கல்லூரிகள் தான் என்று குற்றம்சாட்டுகின்றனர் கல்வியாளர்கள். ஐஐடி போன்ற கவுரவமிக்க கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி தரம் உயர்ந்த அளவில் வழங்கப்படுவதாகவும், அங்கிருக்கும் மாணவர்களின் தனித்திறனை வளர்த்துகொள்ள சூழ்நிலை ஏதுவாக இருப்பதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொறியியல் மாணவர்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு மற்றொரு காரணமாக இருப்பது பாடத்திட்டமும் தான் என்கின்றனர் கல்வியாளர்கள். இந்திய பொறியியல் பாடத்திட்டத்தையும், சீன பாடத்திட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் முதல் இரண்டு ஆண்டுகளில் இந்திய மாணவர்கள் சீன மாணவர்களை விட அதிக திறன் படைத்தவர்களாக இருப்பதாகவும், பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சீனர்கள் இந்திய மாணவர்களை முந்துவதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆனால் இந்த விஷயத்தை பார்க்காமல் பொறியியல் கல்வித்தரத்தை உயர்த்த நுழைவு தேர்வு கொண்டுவர மத்திய அரசு அரசு முனைப்பு காட்டுவதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒரு காலத்தில் இன்ஜியர்களை தேர்வு செய்து பின்னர் தங்கள் நிறுவனத்திற்கு தேவையானதை அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வந்த நிலை இன்று மாறியுள்ளது.
அதாவது தங்கள் நிறுவனத்திற்கு என்ன தேவையோ அதை படித்துக்கொண்டு வந்தால் மட்டுமே போதும், தங்களுக்கு இன்ஜினியரிங் என்ற டிகிரி எல்லாம் தேவையில்லை என்று சில நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ((இதனால் இத்தனை பொருட் செலவு செய்து நாம் இன்ஜினியரிங் படிக்காமல் ஒரு நிறுவனத்திற்கு தேவையானதை மட்டும் படித்திருக்கலாமோ என்ற எண்ணம் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தி தொகுப்பில் ஐடி நிறுவனங்கள் பற்றியே அதிகம் பேசப்படுவதற்கு காரணம், மாணவர்கள் எந்த துறையில் படித்திருந்தாலும் அவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுப்பது இந்த ஐடி துறை தான் என்பதற்காகத்தான்.
இன்ஞ்சினியர்களுக்காக உருவாக்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களில் அதிக இன்ஞ்சினியர்கள் இல்லை, அவர்களுக்கு பதிலாக ஒரு எம்சிஏவோ, பிசிஏ, படித்தவர்கள் மட்டுமே உள்ளனர்.
ஆனால் இந்த இன்ஜினியர்கள், கொரியர் பாயாகவும், வீட்டுக்கே உணவு கொண்டுவரும் வேலையிலும். கார் ஓட்டுநராகவும், துணிக்கடையிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் தங்கள் வேலையை தக்க வைத்து கொள்கின்றனர். இதுபோல நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் நீங்க இங்ஜினியரிங்கா. நானும் இன்ஜியரிங் தான் என சிரிச்சுக்கிட்டே சொல்வதற்கு தான் இந்த பட்டம் பயன்படுகிறது என்பதே உண்மை.