புதன், 19 செப்டம்பர், 2018

எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் உங்கள் எம்.எல்.ஏக்கள்? September 19, 2018

Image

இந்தியாவிலுள்ள எம் எல் ஏக்களில் அரசு ஊதியம் உட்பட மற்ற தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாய் உள்ளடக்கிய தகவல்களை ASSOCIATION OF DEMOCRATIC REFORMS  என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள்.

►  இந்தியாவில் உள்ள 3145 எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு ஊதியம் ரூ. 24.59 லட்சம்.

►  ஆண்டுக்கு சராசரியாக ரூ. 1.11 கோடி ஊதியத்துடன் கர்நாடகா எம்.எல்.ஏக்கள் முதலிடம். 

►  ஆண்டுக்கு சராசரியாக 5.4 லட்சம் ஊதியத்துடன் சத்தீஸ்கர் எம்.எல்.ஏக்கள் கடைசி இடத்தில் உள்ளனர்.

►  தமிழ்நாட்டில் வருவாய் குறித்து தகவல்களை வெளியிட்ட  192 எம்.ஏல்.ஏக்களின் சராசரி ஆண்டு ஊதியம் ரூ. 24.2 லட்சம். 

►  தென்இந்தியாவில் உள்ள 711 எம்.எல்.ஏக்களின்  சராசரி ஆண்டு ஊதியம் ரூ. 51.99 லட்சம்.

►  இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் மாநிலங்களில் உள்ள 614 எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு ஊதியம்  ரூ. 8.53 லட்சம்.

►  இந்தியாவின் ஆண் எம்.எல்.ஏக்களின் ஆண்டு சராசரி ஊதியம்  ரூ. 25.85 லட்சம் 

►  இந்தியாவின் பெண் எம்.எல்.ஏக்களின் ஆண்டு சராசரி ஊதியம் ரூ. 10.53 லட்சம் 

►  அரசு ஊதியம் தவிர்த்து அதிக வருவாய் பெறும் எம்.எல்.ஏக்கள், விவசாயம் அல்லது சுயதொழில் செய்வதாக தகவல்.

►  ஆண்டுக்கு சராசரியாக அதிக ஊதியம் பெறும் எம்.எல்.ஏக்கள் 8வது வரை மட்டும் படித்தவர்கள்.

►  ஆண்டுக்கு ரூ. 157 கோடிக்கு மேல்  சம்பாதிக்கும்  கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ நாகராஜ் நாட்டிலேயே முதலிடம்.

►  ஆண்டுக்கு  ரூ. 22.65 கோடிக்கு மேல் சம்பாதிக்கும்  காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் தமிழகத்தில் முதலிடம்.

►  இந்தியாவிலுள்ள 4086 எம்.எல்.ஏக்களில் 3145 பேர் மட்டுமே ஊதியம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.