சனி, 22 செப்டம்பர், 2018

ஸ்டெர்லைட் ஆலை நாளை மீண்டும் திறப்பு! September 21, 2018

Image

தூத்துக்குடியில் ஆபத்து நிறைந்த தாமிர தாதுவை வெளியே கொண்டு செல்வதற்காக ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் நாளை திறக்கப்படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை பொதுமக்களின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த மே மாதம் தமிழக அரசால் சீல் வைத்து மூடப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் ஆலையில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ராசாயன பொருட்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு அங்குள்ள தாமிர தாது, ஜிப்சம் போன்ற ராசாயன பொருட்களை வெளியேற்றும் பணி தொடங்குகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரத்தாது 95,000 டன் உள்ளதாகவும், தாமிரத்தாது எளிதில் தீப்பிடிக்கக்கூடியது என்பதால் அதனை வெளியேற்ற தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ள குழுவினர் நாளை முதல் ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு நடத்துவர்கள் என்றும் சந்தீப் நந்துாரி கூறினார்.