மாநில காவல்துறை தலைவரின் காரை கூட கண்டறிய இயலாத வகையில் பணி நேரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எஸ்.ஐ உட்பட இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில டிஜிபியான ஓ.பி.சிங் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக டெல்லி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது நோய்டாவின் அமரப்பள்ளி வாகன செக்போஸ்ட்டை அவருடைய கார் 2.30 மணியளவில் சென்றடைந்தது.
அப்போது செக்போஸ்டில் செக்டார் 39 காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஐ மற்றும் கான்ஸ்டபிள் பணியில் இருந்துள்ளனர். டிஜிபியின் வாகனம் அருகே சென்ற பின்னரே அது டிஜிபியின் வாகனம் என்றும் ஓ.பி.சிங் காரில் உள்ளே இருப்பதும் அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் எஸ்.ஐ மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணி நேரத்தில் விழிப்புடன் இல்லாமல் மிகவும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகவும், வருவது டிஜிபியின் வாகனம் என்று கூட தெரியாதவகையில் மெத்தனமாக இருவரும் செயல்பட்டதாகவும், தொப்பியை அணியாமல் அவர்களது ஜிப்ஸியிலேயே வைத்திருந்தததாகவும் இதன் காரணமாக ஒழுங்கீனமாக செயல்பட்ட காரணத்தால் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி அஜய் பால் சர்மா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச டிஜிபியான ஓ.பி. சிங் இதற்கு முன்னதாக பிரதமரின் பாதுகாப்புப்படையான SPG, தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மத்திய பாதுகாப்புப்படை (CISF) ஆகிய முக்கிய துறைகளில் பணியாற்றியுள்ளார். இவர் உ.பியின் டிஜிபியாக கடந்த ஜனவரி 1ஆம் தேதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.