பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த விதிக்கப்பட்ட கட்டாய தடையானது இன்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் அடுத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படவுள்ளது. இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை இன்று முதல் நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் எனவும், “பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளி வளாகம்” என்ற பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இது தொடர்பாக பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வார்கள் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.