
“மற்ற குழந்தைகளை போலவே எனது வாழ்க்கையும் நகர்ந்தது. ஆசிரியராக வெண்டும் என்பது எனது ஆசை. ஆனால், விண்வெளிக்கு வீராங்கணை ஆனபிறகு செவ்வாய் கிரகத்திற்கு சென்று திரும்பிய பின்னர் ஆசிரியராக வேண்டும்” என மகிழ்ச்சியுடன் தனது விண்வெளி வீராங்கணை கனவை பற்றி விவரித்தார் அலைசா.
அமெரிக்காவின் லூசியானா பகுதியை சேர்ந்த சிறுமி அலைசா கார்சன் (Alyssa Carson). 17 வயதே ஆன இவர், சிறுவயது முதலே செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இருந்து, 2033ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் செயற்கைக்கோளில் பயணிக்க உள்ளார் அலைசா. அதற்கான பயிற்சிகளை நாசா அவருக்கு அளித்து வருகிறது.
சிறுவயதில் பார்த்த செவ்வாய் கிரகத்தை பற்றிய கார்டூன் படத்தில் இருந்து, தான் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும் அதன் பின்னர் பல்வேறு விண்வெளி முகாம்களில் பங்கு கொண்டார். அதன் பின்னர், நாசாவில் இணைந்து விண்வெளிக்கு செல்லும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
18 வயது பூர்த்தி அடையாத ஒருவர் விண்வெளி வீரருக்கான பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. ஆனால், அலைசாவின் அபார திறமை மற்றும் ஈடுபாட்டினால் நாசா அந்த கொள்கையை சற்று தளர்த்தியது. அலைசாவின் 32 வயதில் அவர் விரும்பிய செவ்வாய் கிரக பயணத்தை மேற்கொள்வார். ஆனால், அதற்காக தற்பொழுது முதலே பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன்மூலம், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெறும் முதல் பதின்பருவ மங்கை என்ற பெருமையையும் செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்யவிருக்கும் முதல் மனிதர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் அலைசா.