மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் இரண்டு அலகுகள் நிறுத்தப்பட்டுள்ளதால், 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. முதல் அனல் மின் நிலையத்தில் செயல்பட்டு வரும் நான்கு அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2வது அலகில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மூன்றாவது அலகின் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.