வியாழன், 9 மே, 2019

வரும் 21ம் தேதி நடைபெறுகிறது 21 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்! May 09, 2019

Image
காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் தேர்தலுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் வரும் 21ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இதற்கான முன்முயற்சிகளை ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திர பாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார். தங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், இக்கூட்டத்தில் அதுபற்றி ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் சந்திர பாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 
இதையடுத்து, இக்கூட்டம் வரும் 21ம் தேதி டெல்லியில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க திமுகவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பார் என்றும், அவர் பங்கேற்காவிட்டால் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது
source ns7.tv