பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், அமைச்சரவையின் தீர்மானத்தைத்தான் முடிவாக எடுக்க வேண்டும் என கூறவில்லை என்றும் தெரிவித்தார்.
இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் தரக் கூடாது என்றும் கே.எஸ். அழகிரி கூறினார். ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக தங்கள் கட்சித் தலைமை ஏற்கனவே கூறிவிட்டதாகவும், எனவே, இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்த முடிவு எடுத்தாலும் தங்களுக்கு சம்மதமே என்றும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
source ns7.tv