எம்.பி.க்களை திரும்ப அழைத்துக்கொள்ளும் சட்டத்தின்படி சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் எம்.பி, தொகுதிவாசிகளால் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ள நிகழ்வு முதல் முறையாக பிரட்டனில் அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்தின் Peterborough தொகுதியின் எம்.பியாக கடந்த 2017ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த Fiona Onasanya.35 வயது பெண்ணான இவர் கடந்த ஜனவரியில் காரில் வேகமாக சென்றதற்காகவும், அதனை மறைத்த குற்றத்திற்காகவும் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். இதன் காரணமாக கட்சியிலிருந்தும் இவர் நீக்கப்பட்டார்.
கடந்த 2015ம் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்.பிக்களை தகுகுநீக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இச்சட்டத்தின்படி தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 10% பேர் கையெழுத்திட்டு ( 8 நாட்களுக்குள்) எம்.பியை தகுதிநீக்கம் செய்யும் மனுவை தாக்கல் செய்தால் அந்த எம்.பி சட்டப்படி தகுதிநீக்கம் செய்யப்படுவார்.
இந்த சட்டத்தின்படி Peterborough தொகுதி மக்கள் Fiona Onasanyaவினை எம்.பியாக தகுதியிழக்கச் செய்யும் வகையில் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். இதில் 19,261 பேர் கையெழுத்திட்டனர். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 27.6% ஆகும். இதன் காரணமாக Fiona Onasanya வெற்றிகரமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக இங்கிலாந்து பாராளுமன்றமான House of Commons அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தகுதிநீக்கம் செய்யப்படும் சட்டம் நிறைவேறிய பின்னர் இந்த வகையில் தொகுதி மக்களால் தகுதிநீக்கம் செய்யப்படும் முதல் எம்.பியாக Fiona Onasanya மாறியுள்ளார்.
குறைந்தபட்சமாக 21 நாட்களுக்கு எம்.பி மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் இச்சட்டத்தின் கீழ் தகுதியிழப்பு நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.