source ns7.tv
குடிதண்ணீருக்காக இரவு பகலாக தூக்கமின்றி காலிக்குடங்களுடன் சுற்றி திரியும் அவல நிலை ராமநாதபுரம் மாவட்டத்தில் நீடிக்கிறது.
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாக திகழ்வது ராமநாதபுரம் மாவட்டம். இங்கு விவசாயம் மீன்பிடி தொழிலை நம்பியே பொது மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் குடிநீருக்காக பொதுமக்கள் இரவு பகலாக ஆங்காங்கே குடங்களுடன் குழந்தைகளுடன் தள்ளுவண்டியுடன் அலையும் பரிதாபநிலை சொல்ல மாளாது. அனைத்து வீடுகளிலும் இருசக்கர வாகனங்கள் இருக்கிறதோ , இல்லையோ ஆனால் குடிதண்ணீர் கொண்டுவருவதற்கு சிறப்பாக வடிவமைப்பு செய்யப்பட்ட தள்ளு வண்டியை வாங்கி வைத்துள்ளனர் .
காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்களில் கசிவு மற்றும் சுகாதார மற்ற தண்ணீரை பல மணி நேரம் காத்திருந்து எடுத்துச் சென்று பயன்படுத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலேயே திருப்புல்லாணி, மோர்க்குளம், பொக்கனாரேந்தல், ஆணைகுடி ,
ராஜசூரியமடை உள்ளிட்ட கிராமங்களில் குடி தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமம் ஏற்படும் பகுதியாக மாறிவிட்டது. மோர்க்குளம் பகுதியில் குடிநீருக்காக கடந்தாண்டு பல லட்சம் செலவில் போடப்பட்ட குடிநீர் அடிபம்புகள் செயல் இழந்து தண்ணீர் இல்லாமல் காட்சிப் பொருளாக உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடைகாலங்களில் குடி தண்ணீரை சமாளிக்க காவேரி குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுமார் ரூ 4 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்து அனுப்பி 6 மாதம் ஆகியும் இதுவரை அதிகாரிகளால் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் கோடைகாலத்தை சமாளிக்க முடியாமல் உள்ளது. மேலும் தேர்தல் விதிமுறையால் எந்த பணியும் நடக்க வில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
குடிநீர் எடுக்க சாலைகளில் பொதுமக்கள் செல்லும்போது விபத்தில் சிக்கி பல உயிர்கள் பலியாகி உள்ளனர். வறட்சியால் சிக்கி தவிக்கும் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் சிறப்பு கவனம் செலுத்தி குடிதண்ணீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில்
பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் கோரிக்கை.
பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் கோரிக்கை.