குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏரியின் கரை மற்றும் உபரி நீர் வெளியேறும் கால்வாய்கள் சுமார் 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், அதனை தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
சோழவரம், புழல் நீர்நிலைகளை ஒட்டி ஆழ்துளை கிணறுகள் மூலம் உரிய அனுமதியின்றி தண்ணீர் விநியோகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், புழல் ஏரியில் செத்து துர்நாற்றம் வீசும் மீன்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்