புதுச்சேரி அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
புதுச்சேரி அரசு எடுக்கும் முடிவுகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், 10 நாட்களுக்கு புதுச்சேரி அமைச்சரவை எடுக்கும் முடிவை அமல்படுத்தக்கூடாது என உத்தரவிட்டனர்.
மேலும் அமைச்சரவை முடிவுகளை எதிர்ப்பது தொடர்பாக மத்திய அரசும், துணைநிலை ஆளுநரும் 3 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், வழக்கை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.