சனி, 1 ஜூன், 2019

1965ம் ஆண்டு நடந்த மொழிப் போராட்டத்தைவிட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழத்தில் போராட்டம் வெடிக்கும் : வைகோ ஆவேசம் June 01, 2019

Image
தமிழகத்தில் இந்தி திணிப்பை, பாஜக அரசு முயற்சித்தால், மாபெரும் போராட்டம் வெடிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இது, பண்டித ஜவஹர்லால் நேரு, ஹிந்தி பேசாத மாநில மக்கள் மீது, ஹிந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது என்று அளித்த உறுதிமொழியை மீறிய செயல் என்பதை வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். 
புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், 1965ம் ஆண்டு நடந்த மொழிப் போராட்டத்தைவிட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழத்தில் போராட்டம் வெடிக்கும் என்றும் வைகோ எச்சரித்துள்ளார்.