வியாழன், 6 ஜூன், 2019

நீட் மதிப்பெண்: 2 மாணவிகள் தற்கொலை! June 06, 2019

Image
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில், தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ, கடந்தமாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்றார். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தது, தெரியவந்தது. இதன் விரக்தி அடைந்த ரிதுஸ்ரீ, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்  600-க்கு 490 மதிப்பெண்கள் பெற்ற ரிதுஸ்ரீ, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் தற்கொலை செய்துக்கொண்டது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இதேபோன்று, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா என்ற மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 455 மதிப்பெண் பெற்ற நிலையில், நீட் தேர்வில், 720-க்கு 230 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் ஏற்பட்ட விரக்தியில்,  வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.