வியாழன், 6 ஜூன், 2019

ஒரே ஆண்டில் முன்று மடங்கு உயர்ந்துள்ள தமிழக மாணவர்களின் நீட் தேர்வு புறக்கணிப்பு! June 06, 2019


Image
தமிழகத்தில் நீட்  தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்க தேர்வுக்காக விண்ணப்பித்து, அதனை புறக்கணிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஓராண்டில் மும்மடங்கு உயர்ந்துள்ளது. 
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக  தேசிய தேர்வுகள் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் நாடு முழுவதும் நேற்று வெளியாகின. தமிழகத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. 2017ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து 83 ஆயிரத்து 589 பேரில் 32 ஆயிரத்து 570 பேர் தேர்ச்சி பெற்றனர். 
2018ம் ஆண்டு தேர்வு எழுதிய 1 லட்சத்து 14 ஆயிரத்து 603 பேரில், 45 ஆயிரத்து 336 பேர் தேர்ச்சி அடைந்தனர்.இந்த ஆண்டு  நீட் தேர்வை 1 லட்சத்து 23 ஆயிரத்து 78 பேர் தேர்வு எழுதினர். அதில் 59 ஆயிரத்து 875 பேர் அதாவது 48 புள்ளி 57 விழுக்காட்டினர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் அதிகரித்து வரும் அதே வேளையில் தேர்வுக்கு பயந்து அதனை எழுதாமல் விட்டவர்களின் எண்ணிக்கையும்  கடந்த ஓராண்டில் மும்மடங்காக அதிகரித்துள்ளது . 
2018 - நீட் தேர்வு ( தமிழகம் )
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் - 1,20,000 
தேர்வு எழுதாதவர்கள் -  5,398 
 
2019 - நீட் தேர்வு ( தமிழகம் )
 
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் - 1,38,997 
தேர்வு எழுதாதவர்கள் - 15,919
 
நீட் தேர்வை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற தமிழக மக்களின் 
கோரிக்கையானது ஏற்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் நீட் தேர்வை தமிழில் எழுதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது . இந்த ஆண்டு நீட் தேர்வை தமிழில் 31,239 மாணவர்கள் எழுதியுள்ளனர். மொத்தம் நீட் தேர்வை 31,239 மாணவர்கள்  தமிழிலில் எழுதியுள்ளனர். 
 
ஆங்கிலத்தில் தேர்வு எழுதியோரின் விழுக்காடு - 11.84 , 
 
இந்தியில் தேர்வு எழுதியவர்களின் விழுக்காடு 8.86 . 
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு 3 ஆயிரத்து 250 இடங்களும், சித்தா, யுனானி, ஆயுர்வேத படிப்புகளுக்களுக்கு 333 இடங்களும் உள்ளன. இதில் 85% தமிழக மாணவர்களுக்கு எனவும், 15 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டிலும் நிரப்பப்பட உள்ளன. கடந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து மொத்தமாக 26 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி  மாணவர்களின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.