புதன், 5 ஜூன், 2019

குட்டி வேடந்தாங்கலாய் மாறியுள்ள பவானி சாகர் அணை! June 05, 2019

Image
வெளிநாட்டு பறவைகளின் வரத்தால், பவானிசாகர் அணை பகுதி, மற்றொரு வேடந்தாங்கலாய் காட்சியளிக்கிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது பவானி சாகர் அணை. இந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் கோடை காலங்களில் ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகள் 
நீர் தேக்க பகுதிகளுக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், தற்போது நீர்த்தேக்க பகுதிகளில், ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கியுள்ளன. 
மேலும், அதிக அளவு மீன்கள் உள்ளதால், அந்த பறவைகளுக்கு தேவையான உணவும் கிடைக்கிறது. அதிக பறவைகள் வரத்தால், அந்த பகுதி குட்டி வேடந்தாங்கலாக ரம்மியமாய் காணப்படுகிறது.