பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சஞ்சய் தத் கொலை குற்றவாளி இல்லை என்றும், அவரது விடுதலையை முன்னுதாரணமாக கூறுவது தவறு எனவும் கூறினார். குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதும், விடுதலை செய்வதும் நீதிமன்றத்தின் கடமையே தவிர, அரசின் கடமை இல்லை என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை என்பது உண்மையாக இருந்தால், பிரதமர் மோடி தமிழை கற்றுக் கொள்ளட்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மேகதாது அணை விவகாரத்தில் மாநில அரசுடைய ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு வரைவு அறிக்கையை தயார் செய்தது தவறு என்றும் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.