புதன், 5 ஜூன், 2019

வாக்கு சீட்டு முறையை கொண்டு வர போராட்டம் நடத்துவோம் : வெற்றிவேல்! June 05, 2019

Image
நடந்து முடிந்த தேர்தலில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து, அம்மா மக்கள்  முன்னேற்ற கழகத்தை தோற்கடித்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி வெற்றிவேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.  
காயிதேமில்லத் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள அவரது நினைவிடத்தில்  மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.  அமைச்சர் ஜெயக்குமார் அவருடையே மகனையே தேர்தலில்  வெற்றிபெற வைக்க முடியவில்லை எனவும், அவரால் பேசிபேசி மட்டுமே அரசியல் செய்ய இயலும் எனவும் சாடினார். 
வெளிநாடுகளில் உள்ளதை போன்று வாக்கு சீட்டு முறை கொண்டு வர, போராட்டம் நடத்துவோம் எனவும் வெற்றிவேல் தெரிவித்தார்.