ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் உள்ள Sri City என்ற நிறுவனத்தால், கடந்த டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்ட ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள், தற்போது சிட்னியில் பயன்படுத்தப்பட்டு வருவது, இந்தியாவிற்கு பெருமை தரக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
சிட்னியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த மெட்ரோ ரயிலில், LED விளக்குகள், CCTV கேமராக்கள், அவசரகாலத்திற்கு உதவும் தொலைபேசி இணைப்புகள் என சகல வசதிகளும் அடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த மெட்ரோ ரயில்கள் முதற்கட்டமாக 13 ஸ்டேஷன்களில் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஃப்ரான்ஸ் நாட்டினரால் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில்களை உருவாக்கியது ஆந்திராவில் உள்ள Sri City நிறுவனம்.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் பயன்படுத்தப்படும் சிங்கப்பூர், பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற நகரங்களின் பட்டியலில், தற்போது சிட்னியும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது