ஞாயிறு, 2 ஜூன், 2019

முந்தைய ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றியவை! June 02, 2019

 முந்தைய ஆட்சியில் அளித்த வாக்குறுதிகள், அதில் நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்த செய்தி தொகுப்பு.
கடந்த முறை ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, அளித்த மொத்த வாக்குறுதிகள் - 346 ஆகும். இதில், 117 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 190 திட்டங்களில் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 39 வாக்குறுதிகள் பணிகளே நடைபெறாமல் தேங்கிவிட்டன.
பிரதமர் அளித்த அளித்த வாக்குறுதிகளில், மருத்துவ சேவை அளிக்கப்படும், அனைத்து மாநிலங்களுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவை முக்கியமானவை. இதுபோல், இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு, பல்திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பின்மையை போக்க நடவடிக்கை, அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும், போன்றவை முக்கிய வாக்குறுதிகள் ஆகும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, கருப்புப்பணத்தை மீட்க நடவடிக்கை, அயோத்தியில் ராமர் கோயில் போன்றவையும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளாக இருந்தது.
பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், நிறைவேற்றப்பட்ட திட்டங்களில், ஆயூஷ்மான் பாரத் திட்டம், மிஷன் இந்திர தனுஷ் திட்டம் அறிமுகம், ஸ்டார்ட்டப் இந்தியா போன்றவை மக்களின் வரவேற்பை பெற்றது. மேலும், முத்ரா வங்கி, 59 நிமிடங்களில் கடன், ஸ்கில் இந்தியா திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆகியவையும் வாக்குறுதி அளித்தபடி நடைமுறைக்கு வந்தது.
மோடியின் பாஜக அரசு அளித்த வாக்குறுதிகளில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் கருப்புப்பணம் மீட்பு ஆகியவை நிறைவேற்றப்படாத திட்டங்களாக உள்ளது.
மோடி அரசு சொல்லாமல் செய்த திட்டங்களில், உஜ்வாலா திட்டம் மூலம் காஸ் இணைப்பு, முத்ரா வங்கி மூலம் கடன், 
தங்க மகள் சேமிப்புத் திட்டம் ஆகியவை, மிக முக்கியமான திட்டங்களாக உள்ளன.