credit ns7.tv
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் இன்று அறிவித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்கான குடியரசு தலைவரின் அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்தார். கடும் அமளிக்கு இடையே மாநிலங்களவையில் ஆவேசமாக பேசிய அவர், மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக படுகொலை என்றும், நெருக்கடி நிலை நாட்களை நினைவுபடுத்துவதாக உள்ளது என்றும் வைகோ விமர்சித்தார்.