திங்கள், 5 ஆகஸ்ட், 2019

தமிழுக்கு வெறும் 4 கோடி, சமஸ்கிருத மொழிக்கு 400 கோடியா?: கனிமொழி August 05, 2019

Image
தமிழ் மொழிக்காக 4 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு, சமஸ்கிருத மொழிக்காக 400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக, தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். 
சென்னை ராயப்பேட்டையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை மகளிர் அணி சார்பில், ''சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். 
அப்போது பேசிய கனிமொழி, மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், பெரும்பாலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் என தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட கூடிய சூழல் நிலவுவதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும், எனவும் கனிமொழி தெரிவித்தார். 
தொடர்ந்து பேசிய தென்சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் மத்திய அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பியது வெட்கக்கேடான செயல் என விமர்சித்தார். மேலும், முடக்கப்பட்டுள்ள செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு, இதுவரை வழங்கப்பட்ட நிதி தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார். 

credit ns7.tv