அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கடும் கண்டணம் எதிர்வரும் பழனிபாபா நினைவு நாள் வருவதை ஒட்டி கோவையில் வடநாட்டு வாலிபர் முகமது சுஹைல் அடித்துக் கொலை.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முகமது சுஹைல் என்ற 22 வயது இளைஞர் கோவை கோவைப்புத்தூர் பகுதியில் தங்கி இருந்து பெட்சிட் போர்வை போன்றவைகளை தெருத்தெருவாக சென்று விற்று வருகிறார்.
இன்று மதியம் சுமார் 3 மணியளவில் கோவை குனியமுத்தூர் வெத்திலைக்கார வீதி தண்ணிடேங் அருகில் துணி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது முன்னாள் இந்துமுன்னணி தீவிரவாதியும் உள்ளூர் ரவுடியுமான கார்த்திக் ராஜா என்பவன் முகமது சுஹைலை வழிமறித்து மாமூல் கேட்டு மிராட்டி உள்ளான். சுஹைல் மறுக்கவே உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சுஹைல் சுருண்டுவிழுந்து மரணமடைந்து விட்டார்.தற்போது இவர் உடல் கோவை CMC மருத்துவமனையில் உள்ளது.
1997 ஜனவரியில் பழனிபாபா கொல்லப்பட்ட போது ஏற்பட்ட கலவரத்தில் இதே இடத்தில் இதேபோல யூசுப் என்ற இஸ்லாமியரை இந்துமுன்னணி பயங்கரவாதிகள் இதே போல அடித்தே கொன்றார்கள். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஒருநாள் கூட சிறை தண்டனை அனுபவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடநாட்டில் நடப்பது போன்று தமிழகத்திலும் கலவரம் ஏற்படுத்த காவி பயங்கரவாதிகள் சதி செய்கிறார்களா என்பதை அரசு விசாரித்து குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும்