உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளின் பேட்டி வேதனை அளிப்பதாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
பிரச்னையை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய சூழலுக்கு தாங்கள் தள்ளப்பட்டதாக மூத்த நீதிபதிகள் கூறியிருப்பதை சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
உச்சநீதிமன்றத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் நீதிபதிகளுக்கு இடையே தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதையே நீதிபதிகளின் பேட்டி வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதாக சல்மான குர்ஷித் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் குர்ஷித் கூறியுள்ளார்.