உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து ஒரு பெண்ணையும் அவரது குழந்தையையும் தள்ளிவிட்ட திருடனை போலீசார் தேடிவருகின்றனர்.
முகல்சாராய்-வாரணாசி ரயிலில் தனது 5 வயதுக் குழந்தையுடன் மம்தா என்ற பெண் சென்றுகொண்டிருந்தார். ரயில் வியாஸ்நகர் பகுதியில் சென்றபோது மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் பணத்தை பறிக்க முயன்றார்.
குழந்தையை கையில் வைத்துக்கொண்டு திருடனுடன் மம்தா போராடினார். ஆனால் பணத்தை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்ட திருடன், மம்தாவையும், அவரது குழந்தையையும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.