வியாழன், 5 ஜூலை, 2018

அதிக பேஸ்புக் பயனாளர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்! July 5, 2018

அதிக பேஸ்புக் பயனாளர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

ஒவ்வொரு நெட்டிசன்களிடமும் சராசரியாக தலா 7.6 சமூக வலைதள கணக்கு உள்ளதாக கூறப்படுகிறது.. அவற்றில் பேஸ்புக் உள்ளிட்டவையும் அடக்கம்....

➤ஒரு நாளைக்கு 3.2 பில்லியன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அப்லோடு செய்யப்படுகின்றன.

➤ஆண்களும், பெண்களும் சரிசமமான அளவில் வீடியோக்களை ஷேர் செய்கின்றனர்.

➤அதிக பேஸ்புக் பயனாளர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

➤ஒவ்வொரு நொடிக்கும் 6 பேர் வீதம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேர் பேஸ்புக் அக்கவுன்ட்டை புதிதாக துவங்குகிறார்கள்.

➤இதே வேகத்தில் சென்றால், நமது வாழ்நாளில் 5 ஆண்டுகளை சமூக வலைதளங்களில் தான் கழிப்போம் என கூறப்படுகிறது.
 
➤ஒரு நாளில் பார்க்கப்படும் மொத்த வீடியோக்களில் பாதிக்கும் மேற்பட்டவை யூடியூப் வீடியோக்கள் தான் என கூறுகின்றன புள்ளி விவரங்கள்.

➤எல்லோரும் ட்விட்டரில் வலம் வந்தாலும், நான்கில் ஒரு பங்கினர் மட்டுமே ஆக்டிவ்வாக வலம் வருகின்றனர்.

➤ட்விட்டர் பயன்படுத்துவோரில், 80 சதவீதம் பேர் மொபைல் மூலமே தங்கள் பக்கத்தை பார்க்கின்றனர்.

➤சென்ற ஆண்டில் மட்டும் சமூக வலைதளங்களில் விளம்பரத்துக்காக 2,40,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம்.

➤ஒவ்வொரு மாதமும் 100 பில்லியன் Search களுக்கு கூகுள் பதில் சொல்கிறது.