திங்கள், 13 மே, 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, ஜூன் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம்! May 13, 2019


Image
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி,  ஜூன் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக, விவசாய சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  
தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்கத்தின் செயற்குழு கூட்டம், நாகையில் நடைபெற்றது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா,  ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 
காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கக் கோரி, ஜூன் 12- ம் தேதி விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், விவசாயிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 
திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதஸ் உள்ளிட்டோர், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts: