திங்கள், 13 மே, 2019

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் டெல்லி நீதிமன்றம் உத்தரவு...! May 13, 2019


Image
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுசன் எம் குப்தாவின் நீதிமன்ற காவலை வரும் 23-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவிஐபிக்களுக்கான ஹெலிகாப்டர் ஒப்பந்த வழக்கில், பண மோசடி செய்ததாக, இடைத்தரகர் சுசன் எம் குப்தாவை அமலாக்கத்துறை கைது செய்தது. நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் வழங்கக் கோரி மனுதாக்கல் செய்தார்.
எனினும், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், சுசன் எம் குப்தாவின் நீதிமன்ற காவலை வரும் 23-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது