தமிழக அரசு தங்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை என தேசிய ஊரக விளையாட்டு போட்டியில் 14 தங்க பதக்கங்களை வென்ற ராசிபுரம் அரசு பள்ளி மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிராமப்புற மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தேசிய ஊரக விளையாட்டு குழுமம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டு குஜராத்தில் நடைபெற்ற தேசிய ஊரக விளையாட்டு போட்டியில், நாமக்கல்லை சேர்ந்த 63 மாணவர்கள் பங்கேற்றனர். வாலிபால், கபடி, தடகளம் என பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்ற இந்த மாணவர்கள் 14 தங்க பதக்கங்களையும், 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதையடுத்து, ஊர் திரும்பிய மாணவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தங்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை எனவும், அரசு உதவினால் அகில இந்திய அளவில் வெற்றி பெறுவோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.
source ns7.tv