ஞாயிறு, 12 மே, 2019

மேற்குவங்கத்தில் 6ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது வன்முறை! May 12, 2019

Image
மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 
மேற்குவங்க மாநிலம் Ghatal தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜகவின் பூத் ஏஜெண்ட்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பாரதி கோஷ் ஆய்வு நடத்த சென்றார். அப்போது அவரது காரை வழிமறித்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் மேற்குவங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற மற்றொரு வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர்களுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் ஆய்வு மேற்கொள்ள சென்ற அத்தொகுதியின் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான மேனகா காந்தியுடன், மகா பந்தன் கூட்டணி வேட்பாளர் சோனு சிங் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது