சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனத்துறை சார்பில் தங்கும் வசதியுடன் கூடிய சுற்றுலா தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வண்ணபூரணி சூழல் சுற்றுலா, மாயா சூழல் சுற்றுலா என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், தங்கும் வசதியுடன் கூடிய சுற்றுலா தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள் மாலை நேரத்தில் புலிகள் காப்பகத்தில் வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர், வனம் மற்றும் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பார்வையாளர்களுக்கு காணொளி காட்சிகள் அல்லது உரையாடலுக்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
இந்த சுற்றுலாவிற்கு வருகை புரிய விரும்பும் பார்வையாளர்கள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.