முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி செயல்படுததிய பல்வேறு திட்டங்கள் என்னென்ன?
➤சிப்காட், சிட்கோ, டைடல் பார்க் போன்ற தொழில் வளாகங்களை உருவாக்கினார்.
➤தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் கருணாநிதி.
➤அவசர கால ஆம்புலன்ஸ் சேவையான 108ஐ அறிமுகப்படுத்தினார்.
➤குடிசையில்லாத நகரை கட்டமைக்க மாநில குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார்
➤திமுக ஆட்சியில், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டத்தை இயற்றினார்.
➤பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கினார்.
➤மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளையின் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக 1970ல் அறிவித்தார் கருணாநிதி.
➤அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அறிவிப்பினையை வெளியிட்டு நடைமுறைப்படுத்தினார்.
➤கிராமங்களில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை கட்டமைத்தவர் கருணாநிதி.
➤தொழிற்கல்விகளுக்கான நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்தார்.
➤திருநங்கை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நல வாரியங்களை உருவாக்கினார்.
➤இடைநிலை சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார்.