பொள்ளாச்சி அருகே, அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை, மாலை மரியாதையுடன் ஆசிரியர்கள் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பல புதுமைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை, பள்ளி ஆசிரியர்கள் மாலை அணிவித்தும், தாரை- தப்பட்டை முழங்கவும், ஊர்வலமாக அழைத்து வந்தனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த செயல் பெற்றோரை நெகிழ வைத்தது.
இதேபோல் கோவையில், கோடை விடுமுறை முடிந்து கே.ஜி.சாவடியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு வந்த பள்ளிக்கு வந்த மாணவர்களை கிராம மக்கள் சீர் வரிசையுடன் வரவேற்றனர். பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு சீர்வரிசையாக வழங்கினர். கடந்தாண்டு இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், அந்த பள்ளிக்கு கிராம மக்கள் உதவி செய்துள்ளனர்.