உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி, சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடக்கவுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் உபயோகத்தைத் தடுக்கவும், நீர் வளத்தை பாதுகாக்கவும், சென்னையைச் சுத்தமாக்கவும், சுற்றுச்சூழல் நகரமாக உருவாக்குவதற்காக மட்டுமல்லாமல், பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 'நம்ம சென்னை' என்கிற தன்னார்வலர் அமைப்பு 'இயற்கையோடு இணைவோம்' என்கிற ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறது.
உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 ம் தேதி டாக்டர் ராஜலட்சுமி மோகன், தயாரிப்பாளர் அருணா ராஜ் மற்றும் அனிதா ராஜலட்சுமி, தலைமையிலும் ஆதரவுடனும் இந்த முன்னெடுப்பு நடத்தப்படுகிறது.
ஜூன் 5ம் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்னை பெசண்ட் நகர் கடற்கரையை சுத்தப்படுத்தும் முயற்சியில் ‘Cleanup Challenge’ நடைபெறவிருக்கிறது. இதனை அடுத்து, மாலை 4 மணி முதல் 7 மணி வரை இதற்கான விருது வழங்கும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல லட்சம் மக்கள் வசிக்கும்ச் சென்னை மாநகரம், எங்கு பார்த்தாலும் குப்பை என மாசடந்து இருப்பதால், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது நம்ம சென்னை என்கிற தன்னார்வலர் அமைப்பு. இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள சென்னை மக்கள் யாவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனுமதி இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக www.nammachennai.org என்ற இணையப்பக்கத்தில் Register செய்துகொள்ளவேண்டும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.