புதன், 31 அக்டோபர், 2018

இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ள "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி"! October 31, 2018

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலத்திலுள்ள சரோவர் அணை அருகே கட்டப்பட்ட 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்து உரையாற்றினார். ரூ.2,989 கோடியில் 600 அடி உயரத்தில் உருவாகியுள்ள இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு "Statue of Unity" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதனை மொத்தம்...

செவ்வாய், 30 அக்டோபர், 2018

ஜனவரி முதல் சேவையை தொடக்கவிருக்கும் இந்தியாவின் 'TRAIN 18' October 30, 2018

உள்நாட்டில் தயாரான இந்தியாவின் அதிவேக 'ரயில்-18' ஜனவரி மாதம் முதல் தனது சேவையை தொடங்கும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்-18-ன் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்டடன. இந்த அதிநவீன ரயிலில் எக்சிக்யூடிவ், நான்எக்சிக்யூடிவ் என தனித்தனியாக 16 பெட்டிகள் உள்ளன. இதேபோன்று மேலும் 5 ரயில்கள் சென்னை ஐசிஎப்பில்...

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது! October 30, 2018

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரையும்,  மூன்று   விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை. நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த் 7 மீனவர்களையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்து, காங்கேசன்துறை முகத்தில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி...

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கும் பணிக்காக மரங்களை வெட்டக் கூடாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை! October 30, 2018

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக, சாலையோர மரங்களை வெட்டக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை-நத்தம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் உள்ள மரங்களை வெட்டி, விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள முயற்சிப்பதாக மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்த தமிழரசன் என்பவர் பொதுநல மனுவை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.அதில், மரங்களை வெட்ட இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும், மரங்களை வெட்டாமல் மாற்று இடங்களில் வைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை...

​ஸ்ரீவைகுண்டம் அருகே கி.மு10000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருவிகள் கண்டெடுப்பு! October 30, 2018

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கி.மு10000 ஆண்டுகள் முற்பட்ட இடைகற்கால கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.சிவகளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை ஆராய்ச்சி செய்து வரும் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமர குருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர்  மாணிக்கம் என்பவர் சிவகளையில் உள்ள தரிசுகுளம் மற்றும் தம்ளார் மூக்கு ஆகிய பகுதிகளை ஆராய்ச்சி செய்தபோது அங்கு இடைகற்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய 102 கற்கருவிகளை இந்திய தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா...

உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்த நீங்கள் யார்? - அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் கேள்வி October 29, 2018

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்த தாங்கள் யார் என பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். கேரள மாநிலம் கன்னூரில் பாஜக அலுவலகத்தை திறந்துவைத்துப் பேசிய அமித்ஷா, சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைக்கும், கேரள அரசின் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அமித்ஷாவின் பேச்சிற்கு கடும் கண்டனம்...

திங்கள், 29 அக்டோபர், 2018

பிட்ஸ்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பன்னாட்டு தலைவர்கள் கண்டனம்! October 28, 2018

மெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். பிட்ஸ்பர்க் நகரில் உள்ள யூத வழிப்பாட்டு தலத்தில் புகுந்த மர்மநபர் ஒருவர், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டை நடத்திய ராபர்ட் பவர்...

மக்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்க வேண்டும்" : பொதுமக்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள் October 28, 2018

மக்கள் பிரதிநிதிகள் கடமையை செய்ய தவறும்போது பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஸ் வலியுறுத்தியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த இலவச சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று கூறினார். தேர்தலின்போது  வாக்காளர்கள் பெறும் அன்பளிப்பு...

​"சென்னை மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும்" - வானிலை ஆய்வு மையம் October 29, 2018

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சமீப காலத்தில் ரெட் அலர்ட் அறிவிப்புக்கு முன்பிருந்து தமிழகத்தில் மிதமாக மட்டுமே ஆங்காங்கு மழை பெய்துவருகிறது. ரெட் அலர்ட் அறிவிப்புக்கு பின் சொல்லிக் கொள்ளும்படியாக மழை ஏதுமில்லை. இந்நிலையில் தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு...

இந்தோனேஷியாவில் 188 பேருடன் சென்ற உள்ளூர் விமானம் கடலில் விழுந்து விபத்து! October 29, 2018

இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து, இன்று அதிகாலை புறப்பட்டுச்சென்ற உள்ளூர் பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 6.20 மணிக்கு, லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ரக விமானம் புறப்பட்டுச்சென்றது. விமானத்தில் 188 பயணிகள் உள்பட 189 பேர் பயணம் செய்தனர். ஜகார்தாவில் இருந்து பங்கால் பினாங்...

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக மைத்ரிபால சிறிசேனா அறிவிப்பு! October 27, 2018

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.இலங்கையின் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து, பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து,  இலங்கையில் முன்பு...

சனி, 27 அக்டோபர், 2018

யாருப்பா இந்த பெண் ??

...

வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் மோடி : மன்மோகன் சிங் October 27, 2018

நம் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் சூழல் தரமிழந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எழுதிய தி பாரடாக்சியல் பிரைம் மினிஸ்டர் என்ற நூலின் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 2014-ம் ஆண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப்...

பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு! October 27, 2018

பிரதமர் மோடி ஓடலாம், ஒளியலாம், ஆனால் அவரால் சிபிஐ விவகாரத்தில் உண்மையை மறைக்க முடியாது என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சிபிஐ அமைப்பின் புதிய தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் சிபிஐ அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  டெல்லி லோதி காலனியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தை...

கடைகளில் வேலை செய்பவர்கள் அமரலாம்: சட்டம் இயற்றியது கேரள அரசு! October 26, 2018

கேரளாவில் கடைகள், வணிக நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் இனி உட்கார உரிமை அளித்து கேரள மாநில அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது.  பணி நேரத்தில் உட்காரவும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என பல்வேறு மையங்களில் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதற்கு செவிசாய்த்து இந்த அவசர சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றியுள்ளது.இந்த புதிய சட்டம் மூலம்  பெண்களுக்கு...

நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் October 27, 2018

சாலையில் பொறுப்பில்லாமல் வாகனங்கள் ஓட்டுவதால், நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூரில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் காலை இழந்த சிறுமிக்கு, 19 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. 2012ம் ஆண்டு நடைபெற்ற இந்த விபத்து தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, காப்பீட்டு...

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் என்ன? October 27, 2018

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் பாதிப்பின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பற்றிய முழு விவரம்.நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் தமிழகத்தில் இரண்டாயிரத்து 175 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 23 ஆயிரத்து 294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் 65 பேர் சிகிச்சை...

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்: பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே October 26, 2018

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, அந்நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.இலங்கையின் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து, பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இலங்கையில் முன்பு அதிபராக இருந்த ராஜபக்சே, தற்போது பிரதமராக பதவியேற்றுள்ளார். அதிபர் மைத்திரிபால சிறிசேனா...

வெள்ளி, 26 அக்டோபர், 2018

"ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப்? மே...மே...மே..": ரஜினியை கடுமையாக விமர்சித்த முரசொலி நாளிதழ்! October 26, 2018

ரசிகர்களுக்கான நடிகர் ரஜினியின் எச்சரிக்கை கடிதம் குறித்து திமுக நாளேடான முரசொலியில் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப் மே...மே...மே.. என்ற தலைப்பில் முரசொலியில்  வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், ஊர் ஊராக தெருத்தெருவாக  மன்றம் அமைத்து திரைப்படம் ரிலீசாகும் நாளே திருநாள் என்று வானவேடிக்கை எல்லாம் நடத்தி கொண்டாடிய ரசிகர்களை இப்படி கேவலப்படுத்துவது...

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! October 26, 2018

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு வாரத்தில் விசாரணையை முடிக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் வெடித்தது. இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இருவரையும்...

மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவி வரும் டெங்கு! October 26, 2018

மதுரை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் காய்ச்சலுக்கு 115 பேர் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 11 பேரும், பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரியலூர்...

ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ தலையிடுவதை தடுக்கவே அலோக் வர்மா மீது நடவடிக்கை! October 25, 2018

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் நடந்த முறைகேட்டைப் பற்றி விசாரிப்பதை தடுக்கவே, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் ஒரு அதிகாரியிடம், சிபிஐயின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார். இதன் மூலம்...

வியாழன், 25 அக்டோபர், 2018

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்! October 25, 2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதி சத்திய நாராயணன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கவில்லை என்றும், தனது தனிப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறினார்.18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால்...

வங்கிகளில் வைத்திருக்கவேண்டிய குறைந்தபட்ச இருப்புத்தொகை எவ்வளவு தெரியுமா? October 25, 2018

வங்கிக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என வங்கிகள் தெரிவித்துள்ளன. அதன்படி, மாநகரம், நகரம், கிராம வங்கிகள் என்று தனித்தனியாக பிரித்து, ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளன. எஸ்பிஐ வங்கியில் மாநகரம் மற்றும் நகர வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 3,000 ரூபாய் இருப்பு வைக்க வேண்டும்எஸ்பிஐயில் நகரம் மற்றும் சிறுநகர வாடிக்கையாளர்கள் 2,000 ரூபாயும், கிராம வாடிக்கையாளர்கள் 1000 ரூபாயும் இருப்பு வைக்க வேண்டும்ஹெச்டிஎப்சி...

நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு, உணவுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி October 24, 2018

நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு, உணவுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க கோரி, பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய...

புதன், 24 அக்டோபர், 2018

கேஸ் சிலிண்டரில் கலப்படமா?

...

சிறந்த சாலைகள் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டது WEF! October 24, 2018

உலகில் போக்குவரத்துக்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சிறந்த சாலைகள் கொண்ட நாடுகளின் பட்டியலை  WORLD ECONOMIC FORUM வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள்.► உலகில் சிறந்த சாலை வசதிகள் கொண்ட நாடு சிங்கப்பூர்► சிங்கப்பூரை அடுத்து ஐரோப்பாவின் ஸ்விட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் உள்ளன ► ஆசியாவிலிருந்து ஹாங்காங், ஜப்பான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய...

​பசுமை பட்டாசு என்றால் என்ன தெரியுமா? October 24, 2018

பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அத்துடன் GREEN CRACKERS எனப்படும் பசுமை பட்டாசுக்கள் மட்டுமே வெடிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதை பற்றிய முழு விவரம்.2017 - டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் -  மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.சுற்றுச்சூழலுக்கு...

உள்ளாட்சி தேர்தல் தேதியை 10 நாட்களுக்குள் அறிவிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு! October 24, 2018

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரியும், 10 நாட்களுக்குள் தேர்தல் தேதியை அறிவிக்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகாலம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும்...

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊதியத்தை உயர்த்த கோரி விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்! October 24, 2018

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரியும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு துணி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை...

லஞ்ச வழக்கில் கைதுசெய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் ஜாமீன் மனு தள்ளுபடி! October 24, 2018

லஞ்ச வழக்கில் கைதுசெய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின்  ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வாகன தகுதி சான்று வழங்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கடந்த மாதம் 11ம் தேதி முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையே...

இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சி தேர்தல்; இழந்தது என்ன? October 24, 2018

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழல்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு முக்கியமானதாகி இருக்கிறது. தமிழக உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.கடந்த 2016 அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல்...

செவ்வாய், 23 அக்டோபர், 2018

நான்காவது முறையாக 142 அடியை எட்டியது முல்லை பெரியார் அணை; விவசாயிகள் மகிழ்ச்சி! October 23, 2018

முல்லை பெரியார் அணை நான்காவது முறையாக 142 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தற்போது முல்லை பெரியார் அணையின் நீர்வரத்து 3 ஆயிரத்து 36 கனஅடியாக அதிகரித்து 142 அடியை எட்டியது. மேலும் அணையின் நீர்மட்டம் படிபடியாக...

எழும்பூர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 31 குழந்தைகள் அனுமதி! October 23, 2018

சென்னை எண்ணூரில் காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், எழும்பூர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 31 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எண்ணூர் சத்தியவாணி முத்துநகரை சேர்ந்த சாதிக் பாஷா என்பவரின் 2 வயது குழந்தை சபீக், காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதையடுத்து, கடந்த 5 நாட்களாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,...

நாட்டில் வருடத்திற்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு! October 23, 2018

நாட்டில் வருடத்திற்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 4 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. ஆண்டு வருமானம் ஒரு...