2014 மக்களவை தேர்தலில் வெற்றி பெற பொய்யான வாக்குறுதிகளை கூறியதாக சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி தனியார் தொலைகாட்சி ரியாலிட்டி ஷோவில் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைராலாக பரவி வருகிறது.
பாலிவுட் நடிகர் நானா படேகர் தொகுத்து வழங்கிய "Comic banter between nana and nitin" என்ற மாரத்தி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்காரி பேசியதாவது;
"நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று எங்களுக்கு கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை, எனவே தேர்தலில் பெரிய பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம், தற்போது ஆட்சியில் இருக்கிறோம். மக்களோ தேர்தலில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் ஞாபகம் வைத்துக்கொண்டு, அதெல்லாம் என்ன ஆயிற்று என தேதிவாரியாக நினைவுபடுத்துகிறார்கள்; தற்போது அதையல்லாம் நாங்கள் சிரித்துக்கொண்டே கடந்து போகிறோம்" என கூறியுள்ளார்.
நிதின் கட்காரி பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது, மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்த மராட்டிய ரியலாட்டி ஷோ அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதிகளில் ஒளிபரப்பப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
source:
http://ns7.tv/ta/tamil-news/india/10/10/2018/we-made-false-promises-win-2014-elections-nitin-gadkari