புதன், 31 அக்டோபர், 2018

இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ள "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி"! October 31, 2018

Image

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலத்திலுள்ள சரோவர் அணை அருகே கட்டப்பட்ட 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்து உரையாற்றினார். 

ரூ.2,989 கோடியில் 600 அடி உயரத்தில் உருவாகியுள்ள இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு "Statue of Unity" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதனை மொத்தம் 10 மொழிகளில் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு சில மொழிகளில் மட்டுமே அவை சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மொழிகளில் மொழிபெயர்க்காமல் அந்த வார்த்தைகளை மொழிபெயர்க்காமல் அப்படியே அந்த மொழிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

அதாவது, தமிழுக்கு "Statue of Unity" என்பதனை ஒற்றுமைக்கான சிலை என குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களோ "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி" என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதையடுத்து "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி" என்ற வார்த்தையை சமூகவலைத்தளங்களில் பலரும் குறிப்பிட்டு கலாய்த்தும், மீம்களை உருவாக்கியும் வருகின்றனர். இந்நிலையில் "Statue of Unity"யை அடுத்து "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி" இணையத்தில் ட்ரெண்டாகத் துவங்கியுள்ளது.