புதுச்சேரி கடற்கரையில் அசுத்தம் செய்தால் அபராதம் விதிக்கும்படி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியில் தூய்மை பணிக்கு முக்கியத்துவம் அளித்து, தூய்மை பணி மேற்கொண்டு வருகிறார். கடற்கரையில் தூய்மை பணி நடந்த போது, அங்கு சிறுநீர் கழித்த இளைஞரின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என எச்சரித்திருந்தார். கடற்கரையில் அசுத்தம் செய்தால் அபராதம் விதிக்கும் படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கை சர்வாதிகாரமானது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசை ஏமாற்றுவதற்காக திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம் என அறிவித்த துணைநிலை ஆளுநரும், மாநில அரசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.