டெங்குக் காய்ச்சலுக்கு நாடு முழுவதும் 83 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 2017ம் ஆண்டு ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 401 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 325 பேர் உயிரிழந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டில் செப்டம்பர் வரை 40 ஆயிரத்து 868 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 83 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் மூவாயிரத்து 660 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நான்காயிரத்து 667 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்ததாகவும், அதில் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதார அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டெங்குக் காய்ச்சலுக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் 1,983 பேருக்கு பாதிப்பு ஏற்ட்டதாகவும், 10 பேர் உயிரிழந்தனர் என்றும், டெல்லியில் ஆயிரத்து 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.