வியாழன், 11 அக்டோபர், 2018

மனதின் அதிசய திறனை வெளிப்படுத்தியுள்ள நவீன உளவியல் ஆய்வு! October 10, 2018

மனிதர்களால் 10,000 முகங்கள் வரை நினைவில் வைத்துக் கொள்ள இயலும் என நவீன உளவியல் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

முகங்களை நினைவுகூர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட மிக முக்கியமான ஆய்வில் இம்முடிவுகள் தெரிய வந்திருக்கிறது. இந்த வகையிலான ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்றோர் 1,000 முதல் 10,000 பேரின் முகங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடிந்துள்ளது. சராசரியாக 5,000 முகங்களை ஆய்வில் பங்கேற்ற மனிதர்களால் நினைவுக்கூற முடிந்துள்ளது.

யார்க் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் குழுக்களாக வாழ்ந்த மனிதன் சிலநூறு மனிதர்களை அவ்வபோது சந்திக்கவும், பழகவும் அவர்களின் முகங்களை நினைவுக்கூற வேண்டிய தேவை இருந்தது என்று விளக்கம் அளித்துள்ள ஆய்வாளர்கள், நவீன நகரங்களில் பல லட்சம் மக்களை கடந்துச் செல்ல வேண்டிய சூழல் உள்ள நிலையில், ஊடகங்கள் மூலமாகவும் ஏராளமான முகங்களை மனிதர்கள் அறிந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மனித முகங்களை நினைவுக்கூறும் திறனின் தேவை மிக அதிகரித்திருந்த போதிலும், சில டசன் அளவிலான மக்களின் முகக்கூறுகளை பிரித்தறியும் வகையில் வளர்ச்சி பெற்றுள்ள மனதின் செயல்பாட்டு அம்சம், ஆயிரக்கணக்கானோரை பிரித்தரியும்  வகையில் மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது எதிர்பார்க்காத ஒன்று என்று ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Image