சனி, 13 அக்டோபர், 2018

#METOO புகார்களை விசாரிக்க மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைக்க முடிவு! October 13, 2018

Image


#MeToo-ல் வெளியாகும் புகார்கள் தொடர்பாக பொது விசாரணை மேற்கொள்ள மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக வலைதளங்களில் #MeToo இயக்கம் மூலம் தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். பணியிடங்களில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் தொடர்பாக, அவர்கள் பதிவிடும் தகவல்கள், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

ஹாலிவுட்டில் தொடங்கிய #MeToo புயல் இப்போது இந்தியாவில் மையம் கொண்டுள்ளது. தங்களுக்கு நேரிட்ட துன்புறுத்தல்களை தெரிவிக்கும் பெண்கள், அதனை புகார்களாகவும் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் பாதிக்கப்பட்டவர்களிடம் தனிப்பட்ட முறையிலும் பேசி வருகிறது. 

இந்த நிலையில், #MeToo புகார்களை விசாரிக்க மூத்த சட்ட வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்படும், என்று மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. 

Related Posts: