
புதுக்கோட்டை சிறையில் கைதிகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை புழல் சிறையில் கைதிகள் பல்வேறு வசதிகளுடன் இருந்த வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து புழல் சிறை கண்காணிப்பாளராக இருந்த ருக்மணி புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்ணகாணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டை சிறையில் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கைதிகள் செல்போன், போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா என ஆய்வு மேற்கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சோதனையில் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது