ஞாயிறு, 21 அக்டோபர், 2018

பிரதமர் மோடி நாட்டை துண்டாக்க நினைக்கிறார் : ராகுல்காந்தி! October 21, 2018

Image

பிரதமர் மோடி நாட்டை துண்டாக்க நினைப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், நாட்டின் சிறுபான்மையின மக்கள் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக கூறினார்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே, அச்சப்படும் சூழல் உள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற அவல நிலை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

இதையடுத்து, ஒரு நல்ல அரசு மக்களுக்காக பாடுப்பட வேண்டும்; ஆனால் தற்போதைய சூழல் அவ்வாறு இல்லை எனவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

source: http://ns7.tv/ta/tamil-news/india/21/10/2018/modi-wants-ruin-country-rahul-gandhi

Related Posts: