எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரையும், மூன்று விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த் 7 மீனவர்களையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்து, காங்கேசன்துறை முகத்தில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதே போன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6மீனவர்களையும், ஒரு விசைப்படகையும்,, மண்டபத்தை சேர்ந்த 4மீனவர்கள் ஒரு விசைப்படகை.
இலங்கை கடற்படை எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்து, காங்கேசன்துறை முகத்தில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பின் அவர்களையும், புதிய மீன்பிடி சட்டத்தின் கீழ் அபராத தொகை விதிக்கப்படுவதுடன் படகுகளை அரசுடைமையாக்கப்படுமா? அல்லது விடுதலை செய்யப்படுமா? என்பது தெரியயவரும்.
இலங்கை கடற்படை நேற்று 13 மீனவர்களையும், இன்று 4 மீனவர்கள் என மொத்தம் 17 மீனவர்களை செய்துள்ளது. தமிழக மீனவர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.