தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் பாதிப்பின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பற்றிய முழு விவரம்.
நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் தமிழகத்தில் இரண்டாயிரத்து 175 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 23 ஆயிரத்து 294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கடந்தாண்டு டெங்கு பாதிப்பால், அதிகம் பேர் உயிரிழந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.
2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் 80க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலியாகியுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 5 லட்சத்துக்கும் மேலானனோர் டெங்கு காய்ச்சலாம் பாதிக்கப்பட்ட நிலையில், 800க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.