வெள்ளி, 12 அக்டோபர், 2018

No Leave பார்முலாவை கொண்டு வந்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி! October 12, 2018

Image


நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க, நீதிபதிகள் வேலைநாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கட்டுப்பாடு விதித்துள்ளார். 

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகளாக தீர்வு எட்டப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் 55 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று நாடு முழுவதும் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில்  32 லட்சத்து 4 ஆயிரம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் இரண்டு கோடியே 77 லட்சம் வழக்குகளும் தேங்கிக்கிடக்கின்றன.  

நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, NO LEAVE பார்முலாவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கொண்டுவந்துள்ளார். அதன்படி அவசர காலங்களை தவிர நீதிமன்ற வேலைநாட்களில் நீதிபதிகள் விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளார். 

Related Posts: