மக்கள் பிரதிநிதிகள் கடமையை செய்ய தவறும்போது பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஸ் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த இலவச சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று கூறினார். தேர்தலின்போது வாக்காளர்கள் பெறும் அன்பளிப்பு என்பது அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதற்கு ஒப்பாகும் என்றும் நீதிபதி சுந்தரேஸ் தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதிகள் தங்களது கடமையை மறந்ததால், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்குக் கூட மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் உருவாகிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். ரோட்டரி சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புஸ்பா சத்தியநாராயணா, மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.