திங்கள், 22 அக்டோபர், 2018

அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை உயர்வு! October 22, 2018

அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துவருவதாக உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது. 

1990-ம் ஆண்டின் மத்தியில் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளர்கள் அதிகளவில் தேவைப்பட்ட நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் அதிகமாக பணியில் அமர்த்தப்பட்டனர். ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டு பலமடங்கு அதிகரித்தது. இது போன்ற பல்வேறு காரணிகளால் 2010 முதல் 2017-ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை 86 சதவீதம் வரை உயர்ந்தது. 

அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தி முதலிடத்திலும் அடுத்தபடியாக உருது மற்றும் குஜராத்தியும், 4-ஆவது மொழியாக தெலுங்கும் உள்ளது. கடந்த ஆண்டு கணக்கின்படி 4 லட்சம் தெலுங்கு பேசும் மக்கள் அமெரிக்காவில் உள்ளதாக உலக பொருளாதார மன்றம் கூறியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்ட ஆந்திராவை சேர்ந்த பலர் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர்பொறுப்புகளில் பதவி வகித்து வருவது குறிப்பிடதக்கது.