புதன், 17 அக்டோபர், 2018

​அதிமுக கடந்து வந்த பாதை! October 17, 2018

அதிமுக தொடங்கி இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அந்த கட்சி கடந்து வந்த பாதை குறித்த செய்தி...

1972 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி எம்.ஜிஆரை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கினார் கருணாநிதி. 

1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. 

1977 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர்  தலைமையிலான அதிமுக அமோக வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்தது.

1979 ஆம் ஆண்டு ஜனதா கட்சித் தலைவர்கள் எடுத்த முயற்சிகளால், அதிமுக – திமுக இணையும் சூழல் ஏற்பட்டது. ஆனால் சில காரணங்களினால் இணைப்பு சாத்தியமற்று போனது.

1980 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து, அதிமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி, எம்ஜிஆர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது.

1980 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி உட்பட சில கட்சிகளின் ஆதரவோடு சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதிமுக வெற்றிப்பெற்றது.

1982 ஆம் ஆண்டு அதிமுகவில் ஜெயலலிதா இணைந்தார். 

1984 ஆம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரான ஜெயலலிதா, மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

1984 ஆம் ஆண்டு உடல்நலிவுற்ற எம்ஜிஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.

1987  ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் எம்ஜிஆர் காலமானதை அடுத்து, அவரது மனைவி ஜானகி ராமசந்திரன் முதல்வரானார்.

1988 ஆம் ஆண்டு  ஜெயலலிதா - ஜானகி மோதலால், அதிமுக இரண்டாக உடைந்தது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. 

1989 ஆம் ஆண்டு  ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒன்றிணைந்ததை அடுத்து, இரட்டை இலை சின்னம் மீட்டெடுக்கப்பட்டது. 

1991 ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டதை தொடர்ந்து, நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. முதன் முறையாக ஜெயலலிதா முதல்வரானார். 

1996 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது.